Friday, 23 November 2012

jvjindia@gmail.com

வெற்றி தேவை

--------------------------------------


`
வாழ்கையில் ...........
கண்ணீருடன்  இருந்தாலும்
புன்னகை தேவைப் படுகிறது

வலிகள் இருந்தாலும்
சுகம் தேவைப் படுகிறது

அன்பு இருந்தாலும்
பண்பு தேவைப் படுகிறது

உண்மை இருந்தாலும்
உயர்வு தேவைப் படுகிறது

தோல்வியே........ தொடர்ந்தாலும்
வெற்றி தேவைப் படுகிறது ...........ரோஷினி

நட்புடன் வாழ 

----------------------------------------
உறவுகள் தேவைதான் 
உலகத்தில் வாழ்வதற்கு .. 
ஆனால் 
உன்னைப்போல் 
 நண்பர்கள் தேவை 
நிஜமாய்
 நட்புடன் வாழ்வதற்கு ...............ரோஷினி 


-- 


கனவிலாவது 

.....................................................
இசையைகேட்க 
இதயம் கொடுத்த
 இறைவா ......

கவிதைஎழுத 
ஒரு 
காதலியை கொடு 
கனவிலாவது.................ரோஷினி 


பரிசு 

-----------------
புன்னகைக்கும் 
அவளின்
  இதழ்கள்...

என் 
 இதயத்திற்கு 
அவள்
 கொடுத்த 
அன்பு  பரிசு ............ரோஷினி 


அவளுடன்  நான்

-----------------------------------------

பல 
கோடுகள் தானே                                                         
 சித்திரமாகிறது 

அன்று 
கொடுக்கப்பட
 தீர்ப்பு  தான் 
இன்று 
மாற்றி  எழுதப்படுகிறது 

பூட்டிய 
கதவுகள் தானே 
மீண்டும் திறக்கப்படுகிறது 

இருட்டுதானே  
பிறகு வெளிச்சமாகிறது 

அதனால் தான் 
கனவுகாண்கிறேன் 
என்றாவது 
ஒரு நாள் 

பலிக்காதாயென்று .............ரோஷினி 


தெரியாமல் 

---------------------------
வெகுநேரம் 
கால்மேல்  கால் 
போடுகொண்டிருந்தாள் ...
நான்
 பார்க்கும்போது ..........

 நினைத்தேன் 
ஓ ..இதுதான் 
பெண்ணுரிமையோவென்று 

அவளின்
  கண்கள் மட்டும் 
மறுத்தன
உண்மையைச்சொல்ல ...

ஆனால் 
 அவளுடைய  ஆடை 
கிழித்திருப்பது
 தெரியாமல்.......ரோஷினி  


புரட்சிப்பெண் 

-----------------------------------------

வெள்ளை 
 புடவையில் 
கலர் பெயிண்டிங் 
செய்கிறாள் 
விதவை ..........ரோஷினி 


அவளின் இதயமும் 

------------------------------------------------------------

அவளின்  மூச்சு  காற்று 
பட்டதால் 
சூடானது 
 எனது 
உடல் மட்டுமல்ல 
வேகமாக துடிக்கும் 
அவளின் 
 இதயமும் ...........ரோஷினி 



அவளை நினைத்து 

-----------------------------------------------------

உறக்கம்  வரவில்லை 
எனக்கு .... 
பொழுது விடியும்வரை 
என் வீட்டு 
மொட்டை மாடியில் 
வின் மீன்களுக்கும் தான் .... ரோஷினி 










No comments:

Post a Comment