Tuesday, 20 November 2012

  என்ன செய்ய போகிறேன்
--------------------------------------------
அதிகாலை
விடியும் முன்னே
விழித்தெழுவாள்.......

வீட்டுவேலைகள்
 எல்லாம்
செய்து என்னை 
எழுப்புவாள்...........


 பல்தேயித்து
குளிப்பாட்டி
எனக்கும்
 உணவளிப்பாள்.......

காலை மாலை
 இருவேளை
பள்ளி வாகனம்
வருமுன்பே
காத்திருப்பாள்............

வந்தவுடன்
 கட்டியணைத்து
முத்தமிடுவாள்...


வீட்டில்வந்து
உடைமாற்றி
தின்பண்டம்
கொடுப்பாள்........

பிறகு
பள்ளியில்
இன்று
நடந்ததுஎன
கேட்டு உளம்
மகிழ்வாள்......

மழலைமொழியில்
 நான் சொல்லும்
பாடல்கேட்டு
மதி மயங்குவாள்.........

நான் பெற்ற
செல்லமே
தங்கமே
என பூரிப்பில்
திளைப்பாள்....

இரவு உணவளித்து
மழலையாகி
கதைகள் சொல்லி
உறங்க வைப்பாள்.....


வண்டு
பூச்சிகள்
கடித்துவிடுமோ
என 
உறங்காமல்
விழித்திருப்பாள்..

என்ன செய்யபோகிறேன் 
நான்...............

எனக்காக
எல்லாம்
செய்யும்
என்
 அன்னைக்கு........ரோஷினி

No comments:

Post a Comment