Monday, 5 November 2012

விட்டுவிடு
-----------------------------------

ஏய்
மானுடா....
உன்னை
பத்துமாதம்
சுமந்து பெற்ற
உன்
தாய்க்குத்தான்
தொந்தரவு
செய்கிறாய்
அனுதினமும்.............
அனால்
நாம்
எல்லோரையும்
சுமக்கின்ற
இந்த பூமிதாயையாவது
விட்டுவிடு.
அவள்
உருவாக்கிய
இயற்கை
அரண்களான
மரங்களை
வெட்டு கின்றாய்
மண்ணையும்
நீரையும்
மாசுபடுத்துகின்றாய்
ஆகாயத்தை
சூடுபடுத்துகின்றாய்
ஒசோனில்
ஒட்டையைபோடுகிறாய்
விலை நிலங்களை
கூறு போட்டு
பணம் பார்க்கிறாய்
வாய்க்கால்
வரப்புகளை
ஆக்கரமித்து
கட்டிடம் கட்டுகிறாய்..
ஜாதி
மதம்
இன
பேதம் பார்க்கிறாய்
இதையெல்லாம்
செய்கின்ற நீ
நல்ல சோறாவது
தின்கிறாயா?
உப்பு
இனிப்பு
காரம்
மற்றும் பலவித
நோய்களுடன்
சுரணை
இல்லாத
உணவையே
தினமும்
மருந்துடன்
உண்கிறாய்
அதனால்..........
நம்மால்
உதவமுடியாவிட்டலும்
உபத்திரம்
செய்யாமல் இரு
உன்
வருங்கால
சந்ததியாவது
நோய்
நொடி
இல்லாமல்
வாழட்டுமே
இல்லையெனில்..........
சுனாமி
நிஷா
நீலம்
போன்ற வைகளை
நீ
எதிர்கொள்ளவேண்டும்
விட்டுவிடு
இன்று முதலாவது
பூமித்தாயை..............JVJ

No comments:

Post a Comment