Monday, 5 November 2012

வாழட்டும் பல்லாண்டு
--------------------------------------------------

ஊரில் எப்பொழுதும்
ஒரே வேக்காடு

அதுக்காக சுற்றி
திரிந்தேன்பல
முட்டுகாடு

கரு மேகத்தால்
சூழ்ந்தது ஒருநாள்
தமிழ்நாடு

செய்திகள் வெளியிட்டது
நாளேடு

நாகை புதுவை
கோயம்பேடு

நில புயலால்பட்டதோ
பெரும்பாடு

அப்போது கேட்டது
பலரின்
கூப்பாடு

திரளாக கூடி
சிந்தித்தனர்
உணர்வோடு

அதனால் உணர்ந்தனர் தம்
நிலைப்பாடு

இதனால் குறைந்தது
பல இழப்பீடு

இனியும் வேண்டுமா
சாதி மத இன
வேறுபாடு

எடுத்தனர்
சிறப்பான
முடிவோடு

இன்றுமுதல்
வாழ்வோம்
ஒன்றோடு

இப்பொழுது பெருமைப்படும்
தாய்த்திருநாடு

இதுதான்
நம்முடைய
ஒருமைப்பாடு

வாருங்கள்
வாழ்த்துவோம்
நல் மனதோடு

வாழட்டும் பல்லாண்டு
சிறப்போடு...................JVJ

No comments:

Post a Comment