Monday, 5 November 2012


உன் பார்வைக்காக

----------------------------------

சில்லென்று வீசுகின்ற
காற்று

மழைக்காக
காத்திருக்கும்
மண்

வறண்ட
பூமி

மேகங்கள்
சூழிந்திருக்கும்
வானம்

சீற்றத்துடன்
காணப்படும்
கடல்

சிலநேரம்
இடியுடன்கூடிய
மின்னல்

குண்டும் குழியுமாய்
இருக்கின்ற சாலைகள்

அவ்வப்போது
வந்து செல்கின்ற
ஒரே
பேருந்து

புல்லை மேய்ந்துகொண்டிருக்கும்
கால்நடைகள்

எங்கள்
வயித்துக்காக
நெல்லு குத்தும்
அம்மா

தோட்ட வேலை செய்யும்
அப்பா

விரிசல் விழுந்த
மண்சுவர்கள்

முட்டை இட்டு
அடைகாக்கும்
கோழி

பொக்கைவாயுடன்
சிரிக்கும்
தாத்தா

பங்கஜம் மாமியுடன்
கதைக்கும்
பாட்டி

ஏய், குப்புசாமி
முனுசாமி
என கூப்பிடும்
பக்கத்துக்கு வீட்டு
மாமா

மாப்பிள்ளை
வருகையை
எதிர்நோக்கும்
முதிர்கன்னி....கோமளா


உணவுக்காக
காத்திருக்கும்
பிச்சைக்காரன்

தெருவில் பட்டம்விடும்
குழந்தைகள்

கபடி விளையாடும்
நண்பர்கள்

பழைய செய்தித்தாள்
படிக்கும்
ஊர்
தலைவர்

போஸ்ட் என
குரல்கொடுக்கும்
தபால்காரன்

வருடத்திற்கு
இருமுறை
கடிதம் போடும்
மேலத்தெரு
ராணுவவீரன் சுப்பிரமணி

இன்றைய செய்தியை
அறிவிக்க
காத்திருக்கும்ரேடியோ

மின்சாரம்
எப்பொழுது
வருமென்றுஊர்மக்கள்

சூரியன்
மறைவிற்காக நிலா

லொள் லொள்
என
குறைக்கும்
தெரு நாய்கள்

மிட்டாய் மிட்டாய்
எனகூவிவிற்கும்
கருப்புசாமி.

காவலுக்கு
ஊர் எல்லையில்.
வீச்சருவளுடன்
வீரய்யன்..

ஆனாலும்
உன்
பார்வைக்காக
மட்டுமே
நான்............JVJ

No comments:

Post a Comment