Monday, 5 November 2012


தோற்பதில்லை

---------------------------

திருமணம்
என்பது
புனிதமான
உறவாக
கருதும்
நம் நாட்டில்...........

திருமணம் செய்யாமல்
சேர்ந்து வாழும்
கலாச்சாரத்தால்

அனைத்தையும்
இழந்து விடுகின்றன
குப்பைதொட்டியில்
குழந்தைகள்.........

உடம்பு
தன்
அதிகாரத்தை
பயன்படுத்தும்போது

உள்ளத்தில்
காதல்
கொல்லப்பட்டு
காமம்
வென்றுவிடுகிறது........

கடல்
தன்
அதிகாரத்தை
பயன்படுத்தியதால்
கரைகூட
கடலாகிவிட்டதே....

காலபோக்கில்
கசந்துவிட்டால்

காமமும்
காதலும்
தட்டுகின்றன
நீதிமன்ற
கதவுகளை......

பிறகு
தூக்கம் கெட்டு
மனம்குழம்பி
திரிகிறார்கள்
பைத்தியமாக....

தேவைதானா
இந்த
கலாச்சார சிரழிவு

ஆதலால்
மனதளவில் மட்டுமே
இணைகின்ற
காதல்
தோற்பதில்லை
என்றுமே.................JVJ

No comments:

Post a Comment