Wednesday, 12 December 2012

உன் நினைவுகளையும்
----------------------------------------------------சிறுவயதில் ...
ஓடி ஒளிந்த இடங்கள்
பல உண்டு ...........
அன்று
நாம் கால் பதித்த
தடம் கண்டு
மகிழிந்தோமடி ........
காலங்கள் கடந்து
மீண்டும்
அந்த நினைவுகளுடன்
சொந்த மண்ணில் ......
இன்று ...
எவ்வளவு மாற்றத்துடன்
அந்த இடமெல்லாம்
உயர்ந்த கட்டிடங்களாய்
நிற்குதடி .....
தேடுகிறேன்
மழலையாகி ..........
தொலைத்த நம்
வாழ்வையும்
உன் பசுமையான
நினைவுகளையும்......ரோஷினி
Saturday, 8 December 2012
எழுத்தோலை கவிதை திருவிழா
அன்னைத்தமிழின் இன்றையநிலை
--------------------------------------------------
அன்னைத் தமிழே உன்னை வணங்குகிறேன் ..........
இன்றயதமிழன்
உன்னை மறந்து
புரியாத மொழிகளில்
தெரியாமல் பேசி
தினம் தினம்
புலம்புகிறான் ....
பேசும்போதே தமிழ் கலந்துவிடுமொயென்று
மனம் குழம்புகிறான் ......
நாகரீகமெனும் நட்புக்காக
அந்நியமொழியிக்கு அடிமையாகிறான்...
இன்றைய தொலைக்காட்சி முதல்
திரைப்படம் வரை
சாகடிக்கப் படுகிறாய்..... உன்னை
தொன்மை மாறா உச்சரிப்புடன்
பேசி பெருமை சேர்த்திடுவோம்...
செம்மொழியான தமிழ்மொழி
நம் தேசம் மட்டுமல்லாமல்
மலேயா சிங்கப்பூரிலும்
ஆட்சி மொழிகளில் ஒன்றல்லவா...
தொழில்மொழி எதுவாக இருந்தாலும்
அன்னைத் தமிழ்மொழியை வெறுக்காதே
ஊர் போற்றும் உன்னை
உலக அரங்கிற்கு எடுத்துச்செல்வோம்..
சாதி மத சாக்கடையால்
தமிழை பிரிக்காதே..
அதுதான் நம் வரலாறு
அதை தினமும் மறக்காதே.............ரோஷினி
.
அன்னைத்தமிழின் இன்றையநிலை
--------------------------------------------------
அன்னைத் தமிழே உன்னை வணங்குகிறேன் ..........
இன்றயதமிழன்
உன்னை மறந்து
புரியாத மொழிகளில்
தெரியாமல் பேசி
தினம் தினம்
புலம்புகிறான் ....
பேசும்போதே அவ்வப்பொழுது
தமிழ் கலந்துவிடுமொயென்று
மனம் குழம்புகிறான் ......
பணம் தான் வாழ்க்கையென்று
பதறி ஓடுகிறான் ..
பாதை பல தவறிச்சென்று
பாவமும் செய்கிறான்
..
தமிழ்வழிக்கல்வி மறந்து
தானே ஒரு வழியைத் தேடி ..
தன்னிலை மறக்கிறான் ....
நாகரீகமெனும் நட்புக்காக
நங்கைகளுடன்
நரக வாழ்க்கை வாழ்கிறான் ...
அந்நியமொழியில் அவள் கதைப்பதால்
அடிமையாகிறான் ..........
இன்றைய தொலைக்காட்சி முதல்
திரைப்படம் வரை
சாகடிக்கப் படுகிறாய்
அன்னைத் தமிழே ....உன்னை
தொன்மை மாறா உச்சரிப்புடன்
பேசி பெருமை சேர்த்திடுவோம்
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டு
பழமையான அன்னைமொழி
இலக்கண மரபுகளையும்
இலக்கியங்களையும் கொண்டதல்லவா ...
செம்மொழியான நம் தமிழ்மொழி
நம் தேசம் மட்டுமல்லாமல்
மலேயா சிங்கப்பூரிலும்
ஆட்சி மொழிகளில் ஒன்றல்லவா...
தொழில்மொழி எதுவாக இருந்தாலும்
அன்னைத் தமிழ்மொழியை வெறுக்காதே
அதுதான் உன் அடையாளம் ..
தமிழை அவமானமாக கருதாதே
ஊர் போற்றும் தமிழ்மொழியை
உலக அரங்கிற்கு எடுத்துச்செல்வோம்..
சாதி மத சாக்கடையால்
தமிழை பிரிக்காதே..
அதுதான் நம் வரலாறு
அதை தினமும் மறக்காதே.............ரோஷினி
தமிழ் வழிக்கல்வி
----------------------------
தமிழ் வழிக்கல்வி பயின்று
தலை நிமிர்ந்த தமிழன் நான்
இனிமையான மொழிகளில் ...நம்
வாழ்க்கையில்தான் எத்தனை
நெறிமுறைகள் எழுத்துக்களாக
திருக்குறளைப்போல ...
ஒழுக்கம் நேர்மை கடமை
வீரமென்று
இலக்கியங்கள் கற்றுக் கொடுத்தன பல ...
பிறந்தால் மட்டும் போதுமா
தமிழை முறையாக கற்க வேண்டாமா ?
ஆங்கில மொழி படிப்பதால் நீ
ஆங்கிலேயன் அல்ல..அது
அந்நியமொழி
நமக்குவேண்டாம் இன்றுடன் விட்டொழி .....
தமிழ் வழிக்கல்வி பயின்ற
சாதனையாளர்கள் இவ்வுலகில் பல உண்டு
வரலாறு கலாச்சாரம் பண்பாடு .. அதை
தமிழ்தான் சொல்லிக்கொடுத்தது அன்போடு...இன்று
நானும் வாழ்கிறேன் நற்பண்போடு ...நம்
தலைமுறையும் தொடரட்டும் பல நூற்றாண்டு
பணம் தான் வாழ்க்கையென்று
பதறி ஓடுகிறாய்..
பாதை பல தவறிச்சென்று
பாவமும் செய்கிறாய் ..
தமிழ்வழிக்கல்வி மறந்து
தானே ஒரு வழியைத் தேடி ..
தன்னிலை மறக்கிறாய் .
பன்மொழிக் கல்வியை விரட்டிடுவோம்
தமிழ்வழிக் கல்வியை உயர்த்திடுவோம்
தமிழில் படித்தோருக்கு முன்னுரிமை
தரணி எங்கும் தொடரவேண்டும்
அதன் பெருமை ...................ரோஷினி
Wednesday, 5 December 2012
குழந்தை தொழிலாளர் முறை
------------------------------------------------------------------------
உலகத்தில் உள்ள அவலங்களில்
இதுவும் ஒன்று ..சில வருட கணக்கின்படி
பல மில்லியன் குழந்தைகளென்று
கொத்தடிமைகளாக
விவசாய முதலாளிகளுக்கு
எடுபிடியாக ..
ஆடு மாடு மேய்ப்பவர்களாக .....
துள்ளித்திரிந்து ஓடியாடி விளையாடும்
இந்த காலகட்டத்தில் ...
டீக்கடை முதல் சாக்கடை வரை
நீங்கள் படும் அல்லல் கண்டு
மனம் வேகுதே
என் உள்ளம் நோவுதே ....
பஞ்சு போன்ற உங்களின்
பிஞ்சு கரங்கள் இன்று கரடுமுரடாய் ...
இரத்தம் கலந்த காயங்களுடன்
கிடைப்பதோ (கயவர்கள் கொடுப்பதோ )
குறைந்த கூலி ..
உங்கள் மனதில் எவ்வளவு வலி
பலநேரங்களில் ஏற்படுகிறது உயிர் பலி ...
ஊரே உன்னை பேசுகிறது .. நீ
அனாதை என்று கேலி ...
குழந்தையும் தெய்வமும் ஒன்று
அது வாயளவில் மட்டுமே...
குழந்தையாகிய தெய்வங்களை
துன்புருத்துவார்களா ....
மற்ற குழந்தை எப்படிஎன்றாலும்
நமக்கென்ன எனும் நிலை மாறி
நம்மால் முடிந்த உதவிகள் செய்து
விழிப்புணர்வு எற்படுத்தி
கல்வியினை புகட்டிடுவோம் ...
குழந்தை தொழிலாளர்களற்ற
புதிய சமூகம் காண்போம்
இந்த நிலை மாற எடுத்துவிடுவோம்
புதிய முடிவு ....அதில்
இருக்கவேண்டும் எப்பொழுதும்
ஒற்றுமை எனும் தெளிவு..............ரோஷினி
Thursday, 29 November 2012
வாழ்வது
ஒருமுறைதான்
...........................................
ஏய் மானுடா .........
உலகத்தில்
உள்ள எல்லா
ஜீவராசிகளைப்போல்
நீயும்
ஒரு ஜீவராசிதான் ......
உனக்கு
இருக்கிற உரிமையும்
உன்னைப்போல்
மரம் செடி கொடி
உயிரினங்கள்
எல்லாவற்றுக்கும்
உண்டு .........ஆனால்
நீ மட்டும் ஆதிக்கம் செய்கிறாய் ...
உனக்கு நீயே
ஆறறிவு யென்று
நினைத்துக்கொண்டு
இயற்கை விதித்திருக்கிற
விதிமுறைகளை மீறுகிறாய் ....
மற்ற ஜீவராசிகளை அழித்து
இந்த பூமி
உன்னுடையதுஎன்கிறாய் ......
அப்படி செய்கின்ற நீ
இன்னும் சில காலங்களில்
குடிக்ககூட நீரில்லாமலும்
சுவாசிக்க தூமையான காற்று
மின்சாரம்
உண்ண உணவில்லாமலும்
இயற்கை சீர்ற்றத்தினால்
அனாதையாகி
யாரும் இல்லாமல்
தனியாக
நிற்கபோகிறாய் ...
என்பதை மறந்துவிடாதே
அது உன்
கையில் தான் உள்ளது
இன்றுமுதல்
இயற்கையோடு
இன்பமாக
ஒன்றி வாழு ....
தாமாதிக்காதே .
வாழ்வது
ஒருமுறைதான்
அதை வாழ்ந்துபாரு ..
உனக்கு கிடைக்கும் ஊரில்
நல்லபேரு
வருகின்ற தலைமுறை
வாழ்த்தும் பல நூறு ....................ரோஷினி
Friday, 23 November 2012
jvjindia@gmail.com
வெற்றி தேவை
--------------------------------------
`வாழ்கையில் ...........
கண்ணீருடன் இருந்தாலும்
புன்னகை தேவைப் படுகிறது
வலிகள் இருந்தாலும்
சுகம் தேவைப் படுகிறது
அன்பு இருந்தாலும்
பண்பு தேவைப் படுகிறது
உண்மை இருந்தாலும்
உயர்வு தேவைப் படுகிறது
தோல்வியே........ தொடர்ந்தாலும்
வெற்றி தேவைப் படுகிறது ...........ரோஷினி
நட்புடன் வாழ
----------------------------------------
உறவுகள் தேவைதான்
உலகத்தில் வாழ்வதற்கு ..
ஆனால்
உன்னைப்போல்
நண்பர்கள் தேவை
நிஜமாய்
நட்புடன் வாழ்வதற்கு ...............ரோஷினி
--
கனவிலாவது
இசையைகேட்க
இதயம் கொடுத்த
இறைவா ......
கவிதைஎழுத
ஒரு
காதலியை கொடு
கனவிலாவது.................ரோஷினி
பரிசு
புன்னகைக்கும்
அவளின்
இதழ்கள்...
என்
இதயத்திற்கு
அவள்
கொடுத்த
அன்பு பரிசு ............ரோஷினி
அவளுடன் நான்
பல
கோடுகள் தானே
சித்திரமாகிறது
அன்று
கொடுக்கப்பட
தீர்ப்பு தான்
இன்று
மாற்றி எழுதப்படுகிறது
பூட்டிய
கதவுகள் தானே
மீண்டும் திறக்கப்படுகிறது
இருட்டுதானே
பிறகு வெளிச்சமாகிறது
அதனால் தான்
கனவுகாண்கிறேன்
என்றாவது
ஒரு நாள்
பலிக்காதாயென்று .............ரோஷினி
தெரியாமல்
வெகுநேரம்
கால்மேல் கால்
போடுகொண்டிருந்தாள் ...
நான்
பார்க்கும்போது ..........
நினைத்தேன்
ஓ ..இதுதான்
பெண்ணுரிமையோவென்று
அவளின்
கண்கள் மட்டும்
மறுத்தன
உண்மையைச்சொல்ல ...
ஆனால்
அவளுடைய ஆடை
கிழித்திருப்பது
தெரியாமல்.......ரோஷினி
புரட்சிப்பெண்
-----------------------------------------
வெள்ளை
புடவையில்
கலர் பெயிண்டிங்
செய்கிறாள்
விதவை ..........ரோஷினி
அவளின் இதயமும்
------------------------------------------------------------
அவளின் மூச்சு காற்று
பட்டதால்
சூடானது
எனது
உடல் மட்டுமல்ல
வேகமாக துடிக்கும்
அவளின்
-----------------------------------------------------
உறக்கம் வரவில்லை
எனக்கு ....
பொழுது விடியும்வரை
என் வீட்டு
மொட்டை மாடியில்
வின் மீன்களுக்கும் தான் .... ரோஷினி
Thursday, 22 November 2012
தேன்கனியா
-----------------------------
நெடிய கருங்கூந்தல்
மயக்கும் காந்தவிழி
நெற்றியில் தெரியும் வட்டநிலா
பளபளக்கும் சிவந்த கன்னம்
ரீங்காரம் மீட்டும் காதணி
ஜல் ஜல் கொலுசு ஒலி
தெய்வீக சிரிப்பு
அமைதி புன்னகை
உயர்ந்து கீழிறங்கும் புருவங்கள்
ஒட்டியாணம் அணிந்த இடுப்பு
பால் நிற பற்கள்
குவிந்த உதடு
வாழைத்தண்டு கால்கள்
வனப்புமிகுந்த உடலமைப்பு
இதுவல்லவோ பிரம்மனின் படைப்பு
நீ ....
கன்னியா
இல்லை தேன்கனியா ?..................ரோஷினி
ஒற்றுமை
--------------------சிறு குழந்தை
வரைந்த .. ஓவியம் கூட
தேச ஒற்றுமையைப்பற்றி .........
அனைவரும்
சமம்
இந்த நாட்டில் .......என்றது .
என்ன சொல்வது
குழந்தையிடம்
இந்த உலகத்தில்
இவ்வளவு
வித்தியாசம்
இந்த
மனிதர்களிடத்தில் ............
கிழ் சாதி மேல் சாதி
ஏழை பணக்காரன்
கருப்பன் வெள்ளையன்
தாய்மொழி வேற்றுமொழி
மதம் வேற்று மதம்
கூனிகுருகினேன் .............வேண்டுமா ?
இந்த பிறவியில்
இப்படியோரு
நரக வாழ்கை...........ரோஷினி
Tuesday, 20 November 2012
எங்கிருக்கிறாய் இரவில் நீ
................................................................
அதி காலை நேரம்
அழைத்தேன்
உன்னை...
கனவுகள்
கலைந்தபடி
கண்களில்
புத்துணர்ச்சியோடு......
கிரிச்...
கிரிச்...என
பறவைகளும்
என் வீட்டு கோழிகூட
உன்
வருகையை
வரவேற்கிறதே....
சற்று வெளிச்சம்
எத்தனை
வண்ணங்களில்
மெல்ல ...
மெல்ல ...
உன்
வருகையை
உறுதிபடுத்தியது..
ஆம்
வருகிறாய்.......
இனி... பொழுதும்
உன்னுடன் தான்
வயலில்
உள்ள நெற்பயிர்களும்
உன்னை கண்டவுடன்
மகிழுதே...
நான்
எங்குசென்றாலும்
என்னையே
சுற்றி வருவாய்......
நீ
என்னைமட்டுமல்ல
இந்த உலகத்தையே
ஆள்கிறாய்........
காலை
முதல் மாலைவரை
மட்டுமே
என்னோடு இருக்கிறாய்...
உன்னோடு
இருக்கின்ற
நான்
எப்பொழுதும்
ஆரோக்கியமாக
உணர்கிறேன்.....
தினமும்
நீ
செய்யும்
வர்ணஜாலம்
எத்தனை அழகு.......
மாலையாகிவிட்டால்
மலைகள் பின்னால்
ஒளிந்துகொண்டு
எட்டிபார்க்கிறாய்....
எல்லோரையும்
மகிழ்விக்கும்
நீ
என்னைமட்டும்
ஏமாற்றி
விடுகிறாய்
இரவுநேரத்தில்......
எப்பொழுது
நாம்
சேர்ந்திருப்பது
எல்லாநேரமும்
உன்னோடு
வாழ்நாள் முழுவதும்.........
ஒரேஒரு
வருத்தம்...
இரவில் மட்டும்
என்னை
தவிக்கவிட்டு
எங்கே
சென்றுவிடுகிறாய்
தனியாக...........
இன்று முதல்
தேடுகிறேன்
உன்னை
எங்கிருக்கிறாய்
இரவில்
நீ
கதிரவா..........ரோஷினி
என்ன செய்ய போகிறேன்
அதிகாலை
விடியும் முன்னே
விழித்தெழுவாள்.......
வீட்டுவேலைகள்
எல்லாம்
செய்து என்னை
எழுப்புவாள்...........
பல்தேயித்து
குளிப்பாட்டி
எனக்கும்
உணவளிப்பாள்.......
காலை மாலை
இருவேளை
பள்ளி வாகனம்
வருமுன்பே
காத்திருப்பாள்............
வந்தவுடன்
கட்டியணைத்து
முத்தமிடுவாள்...
வீட்டில்வந்து
உடைமாற்றி
தின்பண்டம்
கொடுப்பாள்........
பிறகு
பள்ளியில்
இன்று
நடந்ததுஎன
கேட்டு உளம்
மகிழ்வாள்......
மழலைமொழியில்
நான் சொல்லும்
பாடல்கேட்டு
மதி மயங்குவாள்.........
நான் பெற்ற
செல்லமே
தங்கமே
என பூரிப்பில்
திளைப்பாள்....
இரவு உணவளித்து
மழலையாகி
கதைகள் சொல்லி
உறங்க வைப்பாள்.....
வண்டு
பூச்சிகள்
கடித்துவிடுமோ
என
உறங்காமல்
விழித்திருப்பாள்..
என்ன செய்யபோகிறேன்
நான்...............
எனக்காக
எல்லாம்
செய்யும்
என்
அன்னைக்கு........ரோஷினி
Thursday, 15 November 2012

பிரிவு
--------------------------
அதிகமாக
சிரித்தால்
பின்பு
அதிகமாக
அழநேரிடும்
என்று
பலர் சொல்லி
கேள்விபட்டுருக்கிறேன்...........
ஆம்!
நடந்துவிட்டதே
நேற்று
உன்னுடனிருந்த
நேரங்களில்.....
எத்தனை
சந்தோசம்
எவ்வளவு
சிரிப்பு
ஆனந்தம்
மகிழ்ச்சி..........
.எனை மறந்தேன்
சில வேளைகளில்............
ஆனால்
உன்னைபிரிந்த
மறுநிமிடம்
என்
கண்களில்
குளமாய்
நதியாய்
கடலாய்
வழிந்தோடியது
கண்ணீர்...
முடியவில்லை
என்னால்
கட்டுபடுத்த
உன்
நினைவுகளை...........JVJ
Friday, 9 November 2012
வேண்டுதல்
..........................................
தொலைத் தொடர்பு
வளர்ச்சியினாலே
தொடர்ந்தது
நம்
நட்பென்றாலும் ..........அன்பைவெளிப்படுத்தி
ஆதரவாய் பேசினாய் .........
புதிய தகவல்களை
எனக்களித்து
புத்துணர்வு மூட்டினாய் ...........
வாழ்கையில் நான்
வெற்றிபெற
வழிகளைச்சொல்லி
வாழ்த்தினாய் .....
நாம்
பேசி தலைப்புகளில்
அனைத்தும் அடங்கும் .............
உன்னை நேரடியாக
சந்தித்ததில்லை
இன்றுவரை ..............
என் தோழியே ........
இந்த ஜென்மம்
இல்லாவிட்டாலும் ...
என்றாவது
ஒருநாள் உனக்கு
மகனாக
பிறக்கவேண்டுகிறேன் ................JVJ
Tuesday, 6 November 2012
Subscribe to:
Comments (Atom)

























