Saturday, 8 December 2012


எழுத்தோலை  கவிதை திருவிழா 



அன்னைத்தமிழின் இன்றையநிலை
--------------------------------------------------
அன்னைத் தமிழே உன்னை வணங்குகிறேன் ..........
இன்றயதமிழன் 
உன்னை மறந்து 
புரியாத மொழிகளில் 
தெரியாமல் பேசி 
தினம் தினம் 
புலம்புகிறான்  ....

பேசும்போதே தமிழ் கலந்துவிடுமொயென்று 
மனம் குழம்புகிறான்  ...... 
நாகரீகமெனும் நட்புக்காக 
அந்நியமொழியிக்கு அடிமையாகிறான்...


இன்றைய தொலைக்காட்சி முதல்
 திரைப்படம் வரை 
சாகடிக்கப் படுகிறாய்..... உன்னை 
தொன்மை மாறா உச்சரிப்புடன் 
பேசி பெருமை சேர்த்திடுவோம்...


செம்மொழியான தமிழ்மொழி 
நம் தேசம் மட்டுமல்லாமல் 
மலேயா  சிங்கப்பூரிலும் 
ஆட்சி மொழிகளில் ஒன்றல்லவா...

 தொழில்மொழி  எதுவாக இருந்தாலும் 
அன்னைத் தமிழ்மொழியை வெறுக்காதே 

ஊர் போற்றும் உன்னை 
உலக அரங்கிற்கு எடுத்துச்செல்வோம்..

சாதி  மத சாக்கடையால்  
தமிழை பிரிக்காதே..
அதுதான் நம் வரலாறு
அதை தினமும் மறக்காதே.............ரோஷினி  

.



No comments:

Post a Comment