Wednesday, 12 December 2012


உன் நினைவுகளையும் 

----------------------------------------------------


சிறுவயதில் ...
ஓடி ஒளிந்த இடங்கள்
பல உண்டு ...........

அன்று
 நாம் கால் பதித்த

தடம் கண்டு
மகிழிந்தோமடி ........

காலங்கள் கடந்து
மீண்டும்
அந்த நினைவுகளுடன்
சொந்த மண்ணில் ......

இன்று ...
எவ்வளவு  மாற்றத்துடன்
 அந்த இடமெல்லாம்

 உயர்ந்த கட்டிடங்களாய்
நிற்குதடி .....


தேடுகிறேன்
மழலையாகி ..........


 தொலைத்த நம்
வாழ்வையும்
உன் பசுமையான
 நினைவுகளையும்......ரோஷினி









No comments:

Post a Comment