Wednesday, 5 December 2012


குழந்தை தொழிலாளர் முறை


------------------------------------------------------------------------

 உலகத்தில் உள்ள அவலங்களில்
 இதுவும் ஒன்று ..

சில வருட கணக்கின்படி
 பல மில்லியன் குழந்தைகளென்று

கொத்தடிமைகளாக
விவசாய முதலாளிகளுக்கு
எடுபிடியாக ..
ஆடு   மாடு மேய்ப்பவர்களாக .....

துள்ளித்திரிந்து ஓடியாடி விளையாடும்
இந்த காலகட்டத்தில் ...


டீக்கடை முதல் சாக்கடை வரை
நீங்கள் படும் அல்லல் கண்டு
மனம் வேகுதே
என் உள்ளம் நோவுதே ....

பஞ்சு போன்ற உங்களின்
பிஞ்சு கரங்கள் இன்று கரடுமுரடாய் ...
இரத்தம் கலந்த காயங்களுடன்

கிடைப்பதோ  (கயவர்கள் கொடுப்பதோ )
குறைந்த கூலி ..
உங்கள் மனதில் எவ்வளவு  வலி

பலநேரங்களில் ஏற்படுகிறது உயிர் பலி ...
ஊரே  உன்னை பேசுகிறது .. நீ
அனாதை என்று கேலி ...

குழந்தையும்  தெய்வமும் ஒன்று
அது வாயளவில் மட்டுமே...
குழந்தையாகிய தெய்வங்களை
துன்புருத்துவார்களா ....

மற்ற  குழந்தை எப்படிஎன்றாலும்
நமக்கென்ன  எனும் நிலை மாறி

நம்மால்  முடிந்த உதவிகள் செய்து
விழிப்புணர்வு எற்படுத்தி
கல்வியினை புகட்டிடுவோம் ...
குழந்தை தொழிலாளர்களற்ற
புதிய சமூகம் காண்போம்

இந்த நிலை மாற  எடுத்துவிடுவோம்
புதிய முடிவு ....அதில்
இருக்கவேண்டும்  எப்பொழுதும்
ஒற்றுமை எனும் தெளிவு..............ரோஷினி






No comments:

Post a Comment